பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவுள்ளதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவுள்ளதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.பிக் பாஸ் வீட்டில் ஒருவர் மீது ஒருவர் வன்மம் காட்ட தொடங்கியுள்ளனர்.அதிலும் குறிப்பாக அபிஷேக் ராஜா மிகவும் அதிகமாக வன்மத்தை காட்டி வருகிறார்.முதல் போட்டியாளராக நதியா சாங் வெளியேற்றப்பட்டார்.இந்த நிலையில் தற்போது இரண்டாவது வாரத்தில் கோல்டன் காயினை கண்டுபிடிக்கும் டாஸ்க் அனைத்து போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டது.அதன்போது அபிஷேக் ராஜா தான் காயினை தாமரைக்கு கொடுக்கப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லி தன்னைத்தானே விளம்பரப்படுத்தியது மட்டுமல்லாமல், தாமரையை தன் காலில் விழ வைத்த சூட்சமம் மிகுந்த போட்டியாளராக அபிஷேக் திகழ்கிறார்.இதன் காரணமாக பிக் பாஸ் போட்டியை வேற கோணத்தில் விளையாடிவரும் அபிஷேக் ராஜாவுக்கு கமல் ஹாசன் அவர்கள் ரெட் கார்டு கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.