அடிதடியில் முடிந்த தமிழரசுக்கட்சி பிரச்சாரக் கூட்டம்.!!

யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியில் நேற்றையதினம் (11) நடைபெற்ற  இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதனால், அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றியுள்ளனர்.

அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

electionSri Lanka ParliamentSumanthirantna
Comments (0)
Add Comment