நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி !!

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆம் உறுப்புரையின் படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 10ஆவது நாடாளுமன்றத்தின் 1ஆவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்படும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள 2024.11.12ஆம் திகதி, 2410/02 ஆம் இலக்க வர்த்தானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

anurakumaraelectionparlimenteletionSri Lanka Parliamentsrilankaupdates
Comments (0)
Add Comment