அரசியல் ஓய்வை அறிவித்தார் மகிந்த யாப்பா!

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று(03.10.2024)வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், அரசியலில் தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.43 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இந்நிலைமையினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தனது எதிர்கால வாழ்க்கையை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தாம் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்கடிக்கப்படவில்லை எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் சுட்டிக்காட்டியள்ளார்.

Anura Kumara Dissanayakaelectionpresidential electionSri LankaSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment