புதிய பாதுகாப்பு செயலாளரின் வாகனம் விபத்து !! வெளியான அதிர்ச்சி உண்மைகள்

இலங்கையின் (srilanka) புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட டிபெண்டர் வகை ஜீப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாடாளுமன்ற வீதியில் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இன்று (25) அதிகாலை வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு செயலாளர்
விபத்து நடந்த போது, பாதுகாப்பு செயலாளர் எச். எஸ். எஸ். துய்யகொந்தா (Sampath Thuyacontha) அந்த காரில் இல்லை என்று வெலிக்கடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளரை அமைச்சிலிருந்து அழைத்து வருவதற்காக பொல்துவ நோக்கிச் சென்ற போது பிரதான நுழைவாயிலின் இடது பக்கமாக உள்ள நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் சதுப்பு நிலத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Anura Kumara DissanayakaMinistry of Defense Sri Lankapresidential election
Comments (0)
Add Comment