கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்! நவம்பரில் பொதுத் தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி சற்று முன்னர் வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், நவம்பர் மாதம் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்காக, ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Anura Kumara DissanayakaSri LankaSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment