வெற்றிகரமான தேர்தலை வெற்றி மனப்பான்மையுடன் அணுகும் போது நாட்டை விட்டு வெளியேற எந்த காரணமும் இல்லை. சில அரசியல்வாதிகளை விட பொதுமக்கள் புத்திசாலிகள் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று காலை டி.ஏ. மெதமுலன ராஜபக்ச வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதிக்க முடியாததை விஞ்ஞாபனத்தில் கூறவில்லை
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தமது தேர்தல் விஞ்ஞாபனமொன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும், அதில் தங்களால் சாதிக்க முடியாத எதையும் உள்ளடக்கவில்லை எனவும் அவர் கூறினார்.மக்களின் நலனுக்காக வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நாட்டின் அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்று கூறிய அவர், தேசத்திற்கு சேவை செய்யும் போது குடும்பம் மற்றும் குழந்தைகளை பற்றிக்கொள்வது அர்த்தமற்றது என்று குறிப்பிட்டார்.
நாம் பயந்து பின்வாங்கும் அரசியல் சக்தியல்ல
“நாம் பயந்து பின்வாங்கும் அரசியல் சக்தியல்ல. நாங்கள் வெளியேற நினைத்திருந்தால் இவ்வளவு காலத்துக்கு முன்னரே வெளியேறியிருப்போம். நாடு எவ்வாறான பேரழிவுகளை எதிர்கொண்ட போதிலும் நாங்கள் ஒருபோதும் வெளியேறவில்லை.இதற்கிடையில்,கடினமான காலங்களில் மற்ற அரசியல்வாதிகளின் குழந்தைகள் பலர் ஓடிவிட்டனர். ஆனால் நாங்கள் தங்கினோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.