இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (m.a. sumanthiran) தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் (jaffna) வடமராட்சி கிழக்கு குடத்தனையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்தினால் கொடுக்கப்பட்ட உரித்தை மக்கள் பிரயோசனமான முறையில் பயன்படுத்த வேண்டும்.நாட்டின் ஜனாதிபதியாக யார் வருவார் என்கிற சக்தி மக்களின் கையில் உள்ளது.
அதனை அவர்கள் சரியான முறையில் செய்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.