இலங்கை ஜனாதிபதி தேர்தல் : இந்தியாவின் ஆதரவு யாருக்கு..! வெளியான பரபரப்பு தகவல்

இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.இதில் நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் பிரதான மூன்று வேட்பாளர்களுக்கிடையே தான் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு கடும்போட்டி நிலவும் மூன்று வேட்பாளர்களில் யாருக்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இந்தியாவின்(india) ஆய்வாளர் ஒருவர் தனது எதிர்பார்க்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரணில், சஜித்
இலங்கை பிரதானமாக பாதுகாப்பு கேந்திரம் மிக்க இடத்தில் அமைந்துள்ளது.சீனா,அமெரிக்கா உட்பட எந்த நாடுகளுக்கும் இலங்கை முக்கியமான இடத்தில் உள்ளது ஒரு வாய்ப்பாகும்.

ரணில் விக்ரமசிங்க மேற்கு நாடுகளின் ஆதரவை பெற்ற ஒரு நபராவார்.சஜித் பிரேமதாச என்பவர் இந்தியா சார்புடையான கலவையான ஆளாகவே பார்க்கப்படுகிறார்.

சீன ஆதரவு நிலைப்பாட்டில் ராஜபக்சாக்கள்,அநுர குமார
ராஜபக்சாக்கள் தீவிரமான சீன ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.அநுர குமார திஸநாயக்கவும் இயல்பிலேயே கம்யூனீச கொள்கை கொண்டவர். அவரும் சீன சார்பு நிலைப்பாட்டையே கொண்டவர்.

எனவே இந்தியாவின் ஆதரவு யாருக்கு என்றால் தமிழ் பொது வேட்பாளருக்கு கிடையாது.மாறாக சஜித்திற்கே இந்தியாவின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

electionpresidential electionSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment