தேர்தல் பணிகளில் இருந்து நீக்கப்பட்ட அரச அதிகாரிகள் : வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை (Hambantota) மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர (M. P. Sumanasekara) தெரிவித்துள்ளார்.

19 அரச அதிகாரிகள் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் சர்ச்சைத் தீர்வு நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அதன்படி, ஒன்பது அதிபர்கள், ஒரு பிரதி அதிபர், நான்கு ஆசிரியர்கள், ஒரு பொது சுகாதார பரிசோதகர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் மூன்று வைத்தியர்கள் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பல முறை மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் 19 அதிகாரிகளில் 9 பேர், தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் வெற்றிடமான இடத்திற்கு தற்போது அதிகாரிகள் நிரப்பப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

electionpresidential electionSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment