அவசரமாக நாட்டிலிருந்து வெளியேறிய பசில் ராஜபக்ச

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச்சென்றுள்ளார்.

இன்று அதிகாலை (20) 3.05 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் புறப்பட்டுச்சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எந்தவொரு தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

பசில் ராஜபக்ச எந்த நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அவர் பொதுவாக அமெரிக்காவிற்கு அடிக்கடி பயணம் செய்வதினை வழக்கமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் தேர்தல்களை வழிநடத்தி தோல்வியடையும் போது பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

basilelectionrajabakshaSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment