சுவிஸ் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தமிழ் இளைஞன்

சுவிட்ஸர்லாந்தில் (Switzerland) உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருமலை பகுதியை சேர்ந்த 34 வயதான கோபிநாத் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுவிஸ் – சூரிச் நகரின் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த குறித்த இளைஞன் அவர் வசித்து வந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள் கைது

அத்துடன், சந்தேகத்தின் பேரில் அவருடைய அறையில் வசித்து வந்த வெளிநாட்டவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண் குழந்தையின் தந்தையான இந்த இளைஞன் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அவர், திருமலை மண்மீது மிகுந்த பற்று கொண்டவராகவும் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

DeathSri Lankan PeoplesSwitzerlandTrincomalee
Comments (0)
Add Comment