பிரதமர் பதவிக்காக மோதிக்கொள்ளும் சிரேஷ்ட அரசியல்வாதிகள்ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயரும், கண்டி மாவட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயராகும் தற்போது வரையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரின் பெயரையும் கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பிரதமர் பதவி


சஜித் வெற்றி பெற்றால் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார பிரதமராக வேண்டும் என கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.மற்றுமொரு குழு உறுப்பினர்கள் கிரியெல்லவிற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இதேவேளை, இவர்கள் இருவருக்குமிடையே தேவையற்ற போட்டி ஏற்பட்டால், இந்த பதவி மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Lakshman KiriellaR M Ranjith Madduma BandaraSajith Premadasa
Comments (0)
Add Comment