நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா…! வெளியான தகவல்

ஜனாதிபதி விரும்பினால் நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தத் திட்டமோ அல்லது தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (Ministry of Defense Secretary) குறிப்பிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க (Viyani Gunathilaka) கொழும்பு (colombo) ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் காவல்துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை ஏற்பாடு செய்வதற்கான திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் எதுவும் இல்லை“ என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேர்தல்களின் பின்னர் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ministry of Defense Sri LankaNihal TalduwaRanil WickremesingheSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment