தனுஷ் பட இயக்குனருடன் இணையும் நடிகர் நானி.. கதாநாயகி யார் தெரியுமா

தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் நானி. இவருடன் ஜோடியாக நடித்த நாயகிகள் பலர், ஆனால், அதில் ரசிகர்கள் விரும்பும் ஜோடியாக வலம் வந்தவர்கள் நானி மற்றும் சாய் பல்லவி.

இவர்கள் இருவரும் இணைந்து எம்சிஏ மற்றும் ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றது. பின், இந்த ஜோடியை படத்தில் பார்க்க ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

மீண்டும் இணையும் ஜோடி 

இந்த நிலையில், நானி மற்றும் சாய்பல்லவி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சேகர் கம்முலா இயக்கும் புது படத்தில் நானி நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாகவும், கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது, இயக்குனர் சேகர் கம்முலா தமிழில் குபேரா என்ற படத்தை நடிகர் தனுஷ் வைத்து இயக்கிவருவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு புது படத்தை இயக்குவார் என கருதப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.    


cinenewsindia cinemaNaniSai PallaviTamil Cinema
Comments (0)
Add Comment