சென்னையில் த்ரிஷா வசித்து வந்த வீட்டை பெருந்தொகை கொடுத்து வாங்கிய பிரபல நடிகர்.. யார் தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர்.

தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்த த்ரிஷா, கடைசியாக விஜய்யின் லியோ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில், GOAT படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

தற்போது, இவர் தல அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் த்ரிஷா சென்னையில் அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு தற்போது, வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்ததாக கூறப்படுகிறது.

த்ரிஷா வீட்டை வாங்கிய நடிகர் 

இதுவரை த்ரிஷா வசித்து வந்த வீட்டை பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் பானு சந்தர் பெருந்தொகைக்கு வாங்கி உள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

இவர் தமிழில், மூடுபனி மற்றும் அருண் விஜய்யுடன் ஓ மை டாக் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகள் மட்டுமில்லாமல் பல தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


actressindia cinemaIndian ActressTamil ActorsTamil CinemaTrisha
Comments (0)
Add Comment