சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. 10 வருடங்களுக்கு பின் தமிழுக்கு வரும் ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முதலில் அக்டோபர் 10ல் வெளிவரவிருந்தது. ஆனால், ரஜினியின் வேட்டையன் வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யா அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமான் மற்றும் ஊட்டியில் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானது. தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, சூர்யாவின் 44 -வது படத்தில் நடிகை நந்திதா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கப்போவதாகவும், டைட்டில் மற்றும் டீஸர் விரைவில் வெளிவர உள்ளது எனவும் கூறப்படுகிறது.

நந்திதா தாஸ் 10 வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.     

india cinemasuriyaTamil Cinema
Comments (0)
Add Comment