புலம்பெயர்தலுக்குத் தடை விதிக்கும் திட்டம்: சுவிஸ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

புலம்பெயர்ந்தோரால் சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 10 மில்லியனை எட்டிவிடுமோ என்பது குறித்து பொதுமக்களில் மூன்றில் இரண்டு மக்களுக்கு கவலைதான்.

ஆனால், அதற்காக புலம்பெயர்தலை தடை செய்யும் திட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களா?

ஆய்வு முடிவுகள்

புலம்பெயர்தலை தடை செய்யும் திட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக, Larix Foundation என்னும் அமைப்பும் Demoscope என்னும் ஆய்வமைப்பும் இணைந்து சுவிஸ் மக்களிடையே ஆய்வொன்றை மேற்கொண்டன.

ஆய்வின் முடிவுகள், சுவிஸ் மக்களில் 61 சதவிகிதம் பேர் புலம்பெயர்தலை தடை செய்யும் திட்டத்தை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், 65 சதவிகிதம் பேர், தகுதி படைத்தவர்கள் மற்றும் மொழித்திறன் கொண்டவர்கள் மட்டுமே புலம்பெயர அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தேவை என்று கூறியுள்ளார்கள்.

Comments (0)
Add Comment