பாஜகவில் உள்ள குஷ்பு, நமீதாவை விஜய் கட்சிக்கு இழுக்க முயற்சியா? அவர்களே சொன்ன விளக்கம்

பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு, ராதிகா, நமீதா ஆகியோரை விஜயின் தமிழக வெற்றி கழக கட்சிக்கு இழுக்க முயற்சிப்பதாக தகவல் பரவிய நிலையில் அவர்களே விளக்கம் கொடுத்துள்ளனர்.

விஜய் கட்சிக்கு செல்கிறீர்களா?

பாஜகவில் திரை நட்சத்திரங்களான நடிகை குஷ்பு, நமீதா, ராதிகா சரத்குமார், ராதாரவி, செந்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் உள்ளனர்.

இதில் நடிகை குஷ்பு, தான் இருந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அளவில் கட்சி பணியாற்ற வந்துள்ளார்.

இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

அதேபோல, நடிகர் ராதிகா சரத்குமார் கடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், பாஜகவில் திரை நட்சத்திரங்களுக்கு தகுந்த பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்று பேசப்பட்டு வருகிறது.

இதனால், அவர்களை நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சிக்குள் இழுக்க முயற்சி செய்வதாக ஒருபுறம் பேசப்படுகிறது. இதற்கான வேலைகளை ரகசியமாக செய்வதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக நடிகை நமீதாவிடம் கேட்ட போது அவர், “மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாஜகவில் சேர்ந்தேன். எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாடு நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை நான் பெருமையாக நினைக்கிறேன். எனக்கு வேறு எங்கும் செல்வதற்கு எண்ணமில்லை” என்றார்.

அதேபோல நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, “வேலை இல்லாதவர்கள் கிளப்பி விடும் வதந்தி தான் இது. இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார்.    


cinenewselectionindia cinemaTamil CinemaVijay
Comments (0)
Add Comment