ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 3,223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது.
அதாவது, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும், இந்த முறைப்பாடுக கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த 9 ஆம் திகதி 04.30 வரையில் மட்டுமே தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நிலையும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.