சில உற்பத்திகளை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம் : வெளியான தகவல்

ஆப்பிள் (Apple) நிறுவனம் சில உற்பத்திகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், ஐபோன் 13, ஐபோன் 15 pro மற்றும் ஐபோன் 15 pro max ஆகிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் உற்பத்திகளே இவ்வாறு கைவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு,  ஐபோன் 16 Series ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 Series ஆகிய கையடக்க தொலைபேசிகளின் விலைகளை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.

மேலும், சமீபத்தில் அப்பிள் நிறுவனம்,சந்தைக்கு ஐபோன் 16 (ஐபோன் 16) வகைகளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AppleiPhoneTechnology
Comments (0)
Add Comment