சிறைக் கைதிகளை பார்வையிட நாளை விசேட சந்தர்ப்பம்

கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட நாளை (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதார பொருட்கள் நாளை 12ம் திகதி ஒரு கைதிக்கு போதுமானதாக வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, அந்த பார்வையாளர்களை பார்வையிடும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Department of Prisons Sri LankaPrisons in Sri LankaSri Lankan Peoples
Comments (0)
Add Comment