சஜித்துக்கு தெரியாமல் சுமந்திரன் வெளியிட்ட தீர்மானம்

 இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேச கண்காணிப்பாளர்களின் உள்நுழைவு வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படுகிறது.

தேர்தல் மேடைகளில் வாக்காளர்கள் வழங்கும் உறுதி மொழிகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்புக்கள் அங்கு கலந்துகொள்ளும் ஆதரவாளர்கள், மக்கள் ஊடகவியலாளர்களிடம் பல்வேறு நிலைப்பாடுகளை கேட்டும் அறிந்து கொள்கின்றனர்.

இந்த செயற்பாடானது, வடக்கு – கிழக்கு தேர்தல் மேடைகளில் அதிகம் காணப்படுவதை அறியமுடிகிறது.

பொதுவாக வடக்கு – கிழக்கில் தமிழ் பொது வேட்பாளரும், தென்னிலங்கை தலைமைகளும் மேற்கொள்ளும் பிரசார மேடைகளில் அவர்களின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகிறது.

இவ்வாறான ஒரு தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு வடக்குக்கு சஜித் பிரேமதாச சென்றிருந்த காலப்பகுதியில் தான் அங்குள்ள முக்கிய கட்சியான  இலங்கை தமிழரசுக்கட்சி சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தது.

இந்த ஆதரவு கருத்து அக்கட்சியின் முக்கியஸ்தரும், பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தலைமையிலான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

ஜனாதிபதி தேர்தல் ஆதரவை சுமந்திரன் முன்வைத்தமையானது சஜித் பிரேமதாச எதிர்பார்க்காத ஒன்று எனவும், இறுதிவரை அவர் அறியாத விடயம் எனவும் கூறியுள்ளார்.

M. A. SumanthiranSajith PremadasaSri Lanka Presidential Election 2024tna
Comments (0)
Add Comment