கனடாவில் வகுப்புத் தோழி ஒருவரினால் தீமூட்டி காயப்படுத்தப்பட்ட சக மாணவிக்கு பெருமளவு உதவிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈவன் ஹார்டி பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவர் அண்மையில் தீ மூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வகுப்புத்தோழியான மாணவி ஒருவர் இவ்வாறு தீமூட்டி காயப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தரம் ஒன்பதில் கற்கும் மாணவிக்கு பெருமளவானவர்கள் உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் குறித்த மாணவியின் சிகிச்சைக்காக சுமார் 60 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் சுமார் 900 நன்கொடையாளர்கள் இதுவரையில் 60 ஆயிரம் டாலர் வரையில் உதவியுள்ளனர்.
குறித்த சிறுமி, எட்மாண்டனில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.