தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்படும் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி நேற்று (10) மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 183 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜூலை 31 முதல் செப்டெம்பர் 10 வரை மொத்தம் 3,406 தேர்தல் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.