ஐ.நா சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்றிய சீனா

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும்  இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை சீனா பாராட்டியுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சீனப் பிரதிநிதி லீ சியாவோமெய் (Li Xiaomei) இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை விமர்சித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்கக் குழு

இந்த தீர்மானம், சாட்சியங்கள் சேகரிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை கோருகிறது, இது  இலங்கையின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை புறக்கணிக்கிறது என்ற வாதத்தை சீனப்பிரதிநிதி முன்வைத்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்கக் குழுவை ஸ்தாபித்தல், மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பாதுகாப்பு, பொருளாதார மீட்பு முயற்சிகள் மற்றும் இலங்கையின் மேம்பாடுகளை சீன பிரதிநிதி எடுத்துரைத்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கைக்கு சீனாவின் உறுதியான ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, இலங்கையின் சுதந்திரமாகத் தெரிவு செய்யப்பட்ட மனித உரிமைகள் அபிவிருத்திப் பாதைக்கு மதிப்பளிக்குமாறும், அரசியல் அழுத்தங்களை கைவிட்டு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வழங்குமாறும் சீனப்பிரதிநிதி சர்வதேச நாடுகளை வலியுறுத்தியுள்ளார். 



ChinaSri LankaUnited Nations
Comments (0)
Add Comment