22ஆம் திகதி பதவியேற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அனுர தெரிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியானவுடன் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்தவுடன் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புத்தேகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சத்தியப்பிரமாணம் 

செப்டம்பர் 21ஆம் திகதி இந்த நாட்டை எங்களிடம் ஒப்படைக்கவும். இதை ஒவ்வொன்றாக மாற்றத் தொடங்குவோம். முதலில் தேர்தல் முடிவுகள் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியாகும்.

ஒரு மணி நேரம் கூட தவறவிட மாட்டோம், உடனடியாக நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்து மிக விரைவாக நாடாளுமன்றத்தை கலைப்போம்.

ஏனென்றால், இந்தத் திருடர்கள், மோசடிக்காரர்கள், குற்றவாளிகள் இனி ஒரு நாள் கூட இந்த நாடாளுமன்றத்தில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Anura Kumara DissanayakaelectionSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment