விவாகரத்து செய்தி வெளியிட்டதை தொடர்ந்து ஜெயம் ரவி செய்த அதிரடி விஷயம்… என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாய் இமேஜில் நடிக்க வந்து இப்போது இளவரசராக மக்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

கடைசியாக இவரது நடிப்பில் சைரன் படம் வெளியானது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வெற்றியை பெறவில்லை. 

இன்று நடிகர் ஜெயம் ரவியின் 44வது பிறந்தநாள், காலை முதல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர். 

இந்த நேரத்தில் அதாவது நேற்று (செப்டம்பர் 9) ஜெயம் ரவி தான் தனது மனைவியை பிரிய முடிவு எடுத்திருப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். ஜெயம் ரவி அறிக்கை வெளியிட அதில் இருந்து இருவரின் பிரிவுக்கு காரணம் என நிறைய செய்திகள் உலா வருகிறது. 

நேற்று விவாகரத்து செய்தி, இன்று பிறந்தநாள், இடையில் இன்று ஜெயம் ரவி குறித்து இன்னொரு செய்தி வந்துள்ளது. 

அதாவது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம்.

2009ம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்ய அவரது மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறதாம். 

cinenewsindia cinemaJayam RaviTamil Cinema
Comments (0)
Add Comment