யாழ். பல்கலையில் விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால், அவர்களைப் பீடாதிபதி அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய 2023/2024 கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட விஞ்ஞான பீட மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் கடந்த 09 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், வெற்றிடங்களை நிரப்பும் பட்டியல் மூலமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிய மாணவர்களும் 2023/2024 கல்வியாண்டில் தமது கற்கைகளைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உடனடியாக விஞ்ஞான பீடாதிபதி அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு, புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு பீடாதிபதி அறிவித்துள்ளார்.

EducationSri LankaUniversity of Jaffna
Comments (0)
Add Comment