மும்பையில் பல சர்ச்சைக்குள்ளான தனது வீட்டை திடீரென விற்பனை செய்த நடிகை கங்கனா ரனாவத்.. எத்தனை கோடிக்கு தெரியுமா

கங்கனா ரனாவத்

சினிமா நட்சத்திரங்கள் பலர் ஆடம்பரமான பங்களா வீடுகளை பல கோடி செலவு செய்து வாங்கி அதனை தனக்கு பிடித்தது போல வடிவமைத்து பயன்படுத்தி வருவார்கள். அந்த வகையில், நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் பல வருடங்களுக்கு முன் வாங்கிய வீட்டை தற்போது விற்பனை செய்துள்ளார்.

நடிகர் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் என பல நட்சத்திரங்கள் வசிக்கும் பாந்த்ரா என்ற பகுதியில் ரூ. 20 கோடிக்கு 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு பங்களா வீட்டை கங்கனா வாங்கியுள்ளார், 3 மாடி கொண்ட அந்த வீட்டில் அவருக்கு பிடித்தது போல சில மாற்றங்களை செய்தார்.

ஆனால், அந்த மாற்றங்கள் சட்டவிரோததிற்கு உட்பட்டது என்று கூறி மும்பை மாநகராட்சி நிர்வாகம் 2020 – ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பி அத்துடன் புல்டோசரை வைத்து மாற்றியமைக்கப்பட்ட பகுதியை இடித்தனர்.

இது தொடர்பாக, கங்கனா மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்து தடையுத்தரவு வாங்கினார். இந்த நிலையில், தற்போது திடீரென கங்கனா இந்த வீட்டை காமாலினி ஹோல்டிங் என்ற நிறுவனத்திடம் ரூ.32 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.


actresscinenewsIndian ActressKangana Ranaut
Comments (0)
Add Comment