தக் லைஃப் படத்தில் ஒரு சீன் இருக்கு! அதை நினைக்கும்போது.. வெளிப்படையாக சொன்ன அபிராமி

தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்து அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் கமல் ஹாசன்.

மணிரத்னம் இயக்கத்தில் பல வருடங்கள் கழித்து தக் லைஃப் என்ற படத்தில் மீண்டும் நடித்து கொண்டிருக்கிறார் கமல். இந்த படத்தில், சிம்பு,திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படம் கமல் ஹாசனுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகை அபிராமி பேட்டி ஒன்றில் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், கமல் ஹாசன் ஒரு பெரிய லெஜெண்ட், அதுபோலவே மணிரத்னமும் ஒரு பெரிய லெஜெண்ட் தான். மணி சார் இயக்கத்தில் கமல் எப்படி தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார் என்பது பார்க்கவே நன்றாக இருக்கும்.

ஒரு காட்சி எடுக்கிறார்கள் என்றால் அதில் பல மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும்.

ஒரு சீனில் நான் அடுப்பை பற்ற வைப்பது போன்று எடுக்கப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் பல விஷயங்களை பார்த்து பார்த்து நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை பற்றி சொல்லவேண்டும் என்றால் வாவ் என்று மட்டும் தான் சொல்வேன் என அபிராமி வியந்து கூறி இருக்கிறார். 

AbhiramiKamal HaasanThug Life
Comments (0)
Add Comment