சின்னத்திரையில் மீண்டும் நடிக்கமாட்டேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை பிரியங்கா குமார்

சின்னத்திரையில் நடித்து புகழ்பெற்று பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் பிரியங்கா குமார். இவர் தமிழில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர்.

பிரியங்கா சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில், இவர் தெலுங்கு சினிமாவில் அதுரி லவ்வர் மற்றும் ருத்ர கருட புராணம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்து உள்ளார்.

இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதை தொடர்ந்து, கன்னடத்தில் தற்போது 3வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மன்சோரே இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புல்லாங்குழல் கலைஞராக பிரியங்கா நடிக்க உள்ளார்.

வெளிப்படை பேச்சு

இந்த நிலையில், சின்னத்திரையில் மீண்டும் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் சின்னத்திரையில் நடித்தேன் என்றும், தற்போது ஒப்பந்தமாகியுள்ள படத்திற்காக நான் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொண்டு வருகிறேன், இந்த படத்தில் என் முழு உழைப்பையும் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.



actressSerialsTamil TV Serials
Comments (0)
Add Comment