அநுர குமாரவிற்கு திடீர் சுகவீனம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு(anura kumara dissanayaka) திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா(tilvin silva) மாத்தறை மொரவகவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

கடந்த சில நாட்களாக ஓய்வின்றி ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுர குமார, வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

ஓய்வு எடுத்ததன் பின்னர்

அவர், சற்று ஓய்வு எடுத்ததன் பின்னர் மீண்டும் பிரசாரத்தில் இணைந்து கொள்வார் எனவும் தெரிவித்தார்.

2024electionanuraAnura Kumara Dissanayakaelection
Comments (0)
Add Comment