60 ஆண்டுகளுக்குப்பிறகு ரேபிஸ் நோய் கண்டுபிடிப்பு- கனடாவில் பரபரப்பு!

கனடாவில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ரேபிஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், மருத்துவ உலகை பரபரப்படையச் செய்துள்ளது.

 கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

 வௌவால் ஒன்றிடமிருந்து அவருக்கு அந்த நோய் பரவிருக்கலாமென நம்பப்படுகிறது. 

 இந்த நிலையில் ரேபிஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

candacandanewsvairus
Comments (0)
Add Comment