வெளிநாட்டு பெண்ணொருவரை கடத்த முற்பட்ட பிக்கு

அனுராதபுரத்தில் வெளிநாட்டு பெண்ணொருவரை கடத்த முற்பட்ட பிக்கு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படடுள்ளது. 

இத்தாலிய பெண்ணொருவர் நேற்று அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ருவன்வெலிசாய விகாரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணிடம் உரையாடலில் ஈடுபட்ட பிக்கு ஒருவர், பெண்ணின் தொடர்பு இலக்கத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

பெண்ணை கடத்த முயற்சி

சிறிது நேரத்தில் தன்னை சந்திக்க வருமாறு குறித்த இத்தாலிய பெண்ணை அழைத்துள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை, வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்ற பிக்கு முயன்றுள்ளார். 

இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து குறித்த பெண்ணுக்கு, பிக்குவும், அவரின் கார் சாரதியும் கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற பெண், அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

AnuradhapuracrimeItalySri Lanka Police
Comments (0)
Add Comment