விடுதலைப்புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு : வெளியான காரணம்

 சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் அவருக்கு ஆதரவளிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் மன்னார் (Mannar) மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்று (06) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்ததிற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் அரசியல் தலைவர்களோ புலம்பெயர் அமைப்புக்களோ இதுவரை இவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்பை வழங்குதல், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்ப்டக்கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததை தொடர்ந்து புனர்வாழ்வளிக்ப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி இம் முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



electionelection2024presidential electionranilRanil Wickremesinghe
Comments (0)
Add Comment