பாலியல் குற்றச்சாட்டில் பதவி நீக்கப்பட்ட பிரேசில் அமைச்சர்

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, மனித உரிமைகள் அமைச்சர் சில்வியோ அல்மெய்டா மற்றும் மற்றுமொரு அமைச்சரை பாலியல் குற்றச்சாட்டினால் வெள்ளிக்கிழமை (6) பதவி நீக்கம் செய்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திக் கொண்டு அமைச்சரை பதவியில் வைத்திருப்பது நிலையானது அல்ல என ஜனாதிபதி கருதுகிறார்” என்று லூலாவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியை இழந்த சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளரான அல்மெய்டா தெரிவிக்கையில், விசாரணைக்கு சுதந்திரம் வழங்குவதற்காக தன்னை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி லூலாவிடம் கேட்டுக் கொண்டேன்.

“நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கும், என்னை நிலைநிறுத்துவதாகும் இது எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்… சட்டச் செயல்பாட்டிற்குள் நான் என்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய உண்மைகள் வெளிவரட்டும்,” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்களில் ஒருவர் இன சமத்துவ அமைச்சர் அனியேல் பிராங்கோ என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BrazilSexual harassmentworld news
Comments (0)
Add Comment