சட்டத்தின் முன் சமத்துவம்: உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி, தனது அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் என்ற கருத்தை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளது என, அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாட்டில் பேசிய இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

நீதித்துறை மேலாதிக்கம்

“நீதித்துறை மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் என்ற கருத்து  இலங்கையில்ஆபத்தில் உள்ளது.

இந்தநிலையில்  சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நீதித்துறை மேலாதிக்கம் என்ற கருத்தை மீண்டும் நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி உறுதியளிக்கிறது.

மேலும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதி செய்வோம். அத்துடன் தனிப்பட்ட நோக்கங்களுக்காக நீதித்துறையை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியமில்லை.” என்றார்.

2024electionanuraAnura Kumara Dissanayakaelection
Comments (0)
Add Comment