யாழ் விமான நிலையத்தில் அதிரடி கைது !!வெளியான காரணம்!!

யாழ்ப்பாணம் (jaffna) – பலாலி விமான நிலையத்தில் வலம்புரி சங்கை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்றும் (6.9.2024) மதியம் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் (chennai) இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் (இந்தியன் ஏர்லைன்ஸ்) விமானத்தில் குறித்த நபர் யாழ் விமான நிலையம் வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Jaffna Chennai Crime Flight
Comments (0)
Add Comment