முதல் நாள் GOAT படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா.. ?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

முதல் நாளே ரூ. 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ள நிலையில், இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பல சாதனைகளை படைக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி GOAT அடுத்தடுத்த என்னென்ன சாதனைகளை செய்யப்போகிறது என்று.

Vijay Venkat Prabhu Greatest of All Time Box office
Comments (0)
Add Comment