முதல் நாள் வசூலிலேயே செம மாஸ் காட்டியுள்ள விஜய்யின் கோட்… கலெக்ஷன் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் கோட் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ரசிகர்கள் எதிர்ப்பார்த்த செப்டம்பர் 5 வர ரசிகர்கள் படத்தை கண்டு செம கொண்டாட்டத்தில் உள்ளனர். 

வெங்கட் பிரபு இயக்கம், யுவன் இசை, விஜய் நடிப்பு, த்ரிஷா மஞ்சள் புடவை நடனம் என படத்தில் இடம்பெற்ற அனைத்து விஷயங்களும் ஹைலைட்டாக இருக்க ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் உள்ளது. 

படம் ரிலீஸ் ஆனது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அடுத்து என்ன கோட் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் ரசிகர்களிடம் உள்ளது. 

காலை முதல் விஜய்யின் கோட் பற்றிய வசூல் நிலவரங்கள் வலம் வர தற்போது படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 126. 32 கோடி வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

இதனை கண்ட ரசிகர்கள் போட்றா வெடிய என செம சந்தோஷத்தில் உள்ளனர். 

Box officeGreatest of All TimeTamil CinemaVenkat PrabhuVijay
Comments (0)
Add Comment