தமிழரசு கட்சியின் சஜித்துக்கான ஆதரவு: பின்னணியில் இந்தியாவின் மறைகரங்கள்

 இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு தெரிவித்த விடயமானது இந்தியாவின் துண்டுதலின் பேரில் சுமந்திரனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்து நிழவுவதாக ஆய்வாளர் வேல் தர்மா (Vel Dharma) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் (LankaSri) “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை தமிழர் அரசியல் பரப்பில் சலசலப்பை தோற்றுவித்துள்ளது.

இதேநேரம், நேரம் சுமந்திரனை எதிர்த்து நிற்க கூடிய துனிச்சல் மிக்க ஒருவர் தமிழரசு கட்சியில் இல்லை எனவும், கட்சியில் உள்ளவர்கள் சுமந்திரனுக்கு பயந்து நடப்பதனால் தான அவர் தான் தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் போட்டி நிலை அதிகரித்துள்ளது.

M. A. Sumanthiran Sajith Premadasa India Sri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment