ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்த திட்டம் : கசிந்த இரகசிய அறிக்கை

செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இந்த விடயம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு கொழும்பு (Colombo) பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட திட்டம் குறித்து இரகசியமான அறிக்கையொன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு 
நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அறிக்கையை இரகசியமாக பேணுமாறு நீதிமன்றம் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் அறிவிக்குமாறு நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court Sri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment