ஈழத் தமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம்; கனடா நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

தமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை  கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் , நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது.

கனடா நீதிமன்றம் , இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது ,கருத்துசுதந்திரம் சமத்துவ உரிமைகளை மீறுவதாக தெரிவித்திருந்த இலங்கை அமைப்பு தமிழ் இனப்படுகொலை குறித்த மாற்றுக்கருத்துக்களை முடக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.

எனினும் அந்த அமைப்பின் வேண்டுகோளை நிராகரித்துள்ள ஒன்ராரியோ மேல்முறையீட்டு நீதிமன்றம் . இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது.

அது பாரபட்சமான தாக்கங்களை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது. இந்த சட்டம் சிங்களபௌத்தர்களிற்கு எதிரான வெளிப்படையான இனவேறுபாட்டை கொண்டுள்ளது என திருஹேவகே சமர்ப்பித்துள்ளதை நாங்கள் நிராகரிக்கின்றோம், என கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தின் முன்னுரையில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை கொள்கைகள் என குற்றம்சாட்டப்படும் கொள்கைகள் சிங்கள பௌத்த மையப்படுத்தப்பட்டவை என்றே குறிப்பிடப்படுவதாகவும், சிங்கள பௌத்தர்கள் ஒரு இனக்குழுவாக அதற்கு பொறுப்பாளிகள் என தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Sri Lankan Tamils Sri Lanka Canada
Comments (0)
Add Comment