2021 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணம் இந்தியா வசமானது..!

2021 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணம் இந்தியா வசமானது..!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தை இந்திய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி கைப்பற்றியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி 38 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி சார்பில் Yasiru Rodrigo 19 ஓட்டங்களையும், Matheesha Pathirana 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். மழை காரணமாக போட்டி 38 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன், இந்திய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு டக்வர்த் லுவிஸ் முறையில் 102 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி 21 தசம் 3 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது. இந்திய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி சார்பில் Angkrish Raghuvanshi 56 ஓட்டங்களையும், Shaik Rasheed 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். The post 2021 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணம் இந்தியா வசமானது appeared first on .