மஹேந்திரசிங் டோனியின் சாதனை முறியடிப்பு..!

மஹேந்திரசிங் டோனியின் சாதனை முறியடிப்பு..!

நிகழ்த்திய சாதனையை ரிஷாப் பண்ட் தனது 26வது டெஸ்டில் நிகழ்த்தியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தநிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்ட், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் 4 வீரர்களை பிடி எடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். அவர், இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 93 பிடி மற்றும் 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இதன்படி விக்கட் காப்பில் 100 பேரை ஆட்டமிழக்கச்செய்த சாதனையை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.