சன்னி லியோனுடன் நடிக்கும் சதீஷ்!

சன்னி லியோனுடன் நடிக்கும் சதீஷ்!

"ஓ மை கோஸ்ட்" என்ற திகில் படத்தில் நடித்து வரும் நடிகை சன்னி லியோனுடன் நடிகர் சதீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். மேலும், இவர் இந்தி , தெலுங்கு , கன்னட , மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். 987 987 தற்போது தமிழில் 'ஓ மை கோஸ்ட்' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் சதீஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.படப்பிடிப்பில் சன்னி லியோனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ''சன்னி லியோன் மிகவும் இனிமையானவர். சிறந்த நடிகை, அற்புதமான டான்சர், மனிதநேயம் மிக்கவர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.