கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த 14 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த 14 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

குருணாகல் பகுதியில்  கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த 14 வயது மாணவன், உயிரிழந்துள்ளார்.குருணாகல் – வெஹெர பிரதேசத்தில் வௌ்ளத்தில் மூழ்கிய வீதியூடாக பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய போது கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த மாணவன், கால்வாய்க்குள் சிக்கியுள்ளார்.விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் இராணுவத்தை வரவழைத்து மாணவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் மாணவன் மீட்கப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட மாணவன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைகள் பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.