மனிதர்கள் வாழக்கூடிய கோள் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் வாழக்கூடிய கோள் கண்டுபிடிப்பு!

பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட ஒரு சூப்பர் கோள்ளை  ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட 4 மடங்கு நிறை கொண்ட சூப்பர் கோள், ஒரு வருடம் முழுவதும் முடிக்க வெறும் 10.8 நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமியில் இருந்து 37 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைத் தான் சுற்றி வருகிறது. சுற்று வட்டபாதையில் நேராகச் செல்லாமல் உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி செல்கிறது.ராஸ் 508 பி எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தின் மேற்பரப்பில் நீர் உருவாக்கத்திற்கு உகந்த வெப்பநிலை இருப்பதால், மற்ற கிரகங்கள் உடன் ஒப்பிடுகையில் இதில் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.