உக்ரைன் – ரஷ்யா போர் : இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

உக்ரைன் – ரஷ்யா போர் : இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

ரஷ்யா -உக்ரைன்  இடையிலான போரில் கர்நாடக  மாநிலத்தை  சேர்ந்த மாணவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். உக்ரைன் கார்கீவ்  நகரத்தில்  உள்ள   மருத்துவ கல்லூரி  ஒன்றில்  படித்து  வந்த கர்நாடகா மாநிலத்தைச்  சேர்ந்த  நவீன் சேகரப்பா என்கிற  மாணவரே  இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக  வெளியுறவுத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. இதனையடுத்து  ரஷ்யா  மற்றும் உக்ரைனின்  சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்துமாறு இருநாட்டு  தூதுவர்களிடமும்  இந்தியா சம்மன்  அனுப்பியுள்ளது. அதேநேரம் கீவ் நகரில்  சிக்கியுள்ள  இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அங்குள்ள  இந்திய  தூதரகம் வலியுறுத்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.